தமிழ்நாடு

“குடியரசு தினத்தன்று பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்” : இறையன்பு அதிரடி உத்தரவு!

“குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்.” என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

“குடியரசு தினத்தன்று பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்” : இறையன்பு அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தலைமை செயலாளார் உத்தரவு அளித்துள்ளார். அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தக்கோரி தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு எழுதியக் கடிதத்தில், குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். பிரச்சனைக்குரிய 15 இடங்களில் சாதி பாகுபாடின்றி நடத்த வேண்டும். எவ்வித புகார்களுமின்றி குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும்.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

இதற்கான அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories