தமிழ்நாடு

மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய TTF Vasan : நம்பர் ப்ளேட் இல்லாத கார் ஏற்படுத்திய பரபரப்பு !

மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய TTF Vasan : நம்பர் ப்ளேட் இல்லாத கார் ஏற்படுத்திய பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 20 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக TTF வாசன் மீது கோவை போத்தனூர் போலிஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் வழக்குப்பதிவு செய்தனர்.

மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய TTF Vasan : நம்பர் ப்ளேட் இல்லாத கார் ஏற்படுத்திய பரபரப்பு !

அதைத் தொடர்ந்து ஊடகத்தினரை மிரட்டும் விதத்தில் TTF வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வழக்கில் இருந்து கைது செய்வதில் இருந்து தப்பிக்க பெங்களூரு நோக்கி இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற TTF வாசனை சூலூர் போலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதன்பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் TTF வாசன் கடலூர் வருகை புரிந்தார். அப்போது அவரை காண ஏராளமான பைக் பிரியர்கள் அந்த இடத்தில குவிந்ததால் அது பெரும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய TTF Vasan : நம்பர் ப்ளேட் இல்லாத கார் ஏற்படுத்திய பரபரப்பு !

இதனால் போலீசார் அங்கு திரண்டவர்களை விரட்டி அடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 200க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.மேலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய TTF Vasan : நம்பர் ப்ளேட் இல்லாத கார் ஏற்படுத்திய பரபரப்பு !

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் 'COLLEGE ROAD' என்ற படத்தின் முன்னோட்டத்தை காண TTF வாசன் வந்துள்ளார். அப்போது அவர் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்துள்ளார். இதனை கண்டறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

பின்னர் TTF வாசன் வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது TTF வாசன் திரையரங்கில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதனைத்தொடர்ந்து TTF வாசனுக்கு இந்த தகவல் தெரியவர, விரைந்து காவல்நிலையத்திற்கு சென்றார்.

மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய TTF Vasan : நம்பர் ப்ளேட் இல்லாத கார் ஏற்படுத்திய பரபரப்பு !

அங்கு சென்ற TTF வாசனிடம் காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது இந்த கார் தன்னுடையது அல்ல என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார். இருப்பினும் அவர் கூறிய காரணங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த கார் யாருடையது என்பது தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்த பிறகு, அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். TTF வாசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் இதுவும் விளம்பரம் தேடும் நோக்கில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories