தமிழ்நாடு

தனியாக வீட்டின் படுக்கை அறையில் மாட்டிக் கொண்ட சிறுவன்.. 10 நிமிடத்தில் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

சென்னையில் வீட்டின் படுக்கை அறையில் தாழிட்டு கொண்டு திறக்க முடியாமல் மாட்டிக் கொண்ட சிறுவனை 10 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக வீட்டின் படுக்கை அறையில் மாட்டிக் கொண்ட சிறுவன்.. 10 நிமிடத்தில் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்கா வாழ் குடியுரிமை பெற்ற ஸ்ரீ கிருஷ்ணன் தம்பதியினர் சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இதையடுத்து இன்று வீட்டின் படுக்கையறையில் ஸ்ரீ கிருஷ்ணனின் மகன் விது விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது சிறுவன் அறையின் கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டுள்ளார். பிறகு கதவைத் திறக்க முயன்றபோது சிறுவனால் முடியவில்லை. இதனால் சிறுவன் கூச்சலிட்டு அழுதுள்ளான்.

தனியாக வீட்டின் படுக்கை அறையில் மாட்டிக் கொண்ட சிறுவன்.. 10 நிமிடத்தில் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

பின்னர் மகனின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன பெற்றோர்கள் அறையில் சிக்கிக் கொண்ட விதுவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டுள்ளனர்.

தனியாக வீட்டின் படுக்கை அறையில் மாட்டிக் கொண்ட சிறுவன்.. 10 நிமிடத்தில் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

உடனடியாக விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு மீட்புக் குழுவினர், உபகரணங்களைப் பயன்படுத்தி தாழினை உடைத்து அறையில் சிக்கித் தவித்து வந்த சிறுவனைப் பத்திரமாக 10 நிமிடத்தில் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பதற்றத்திலிருந்த மகனிடம் தாய் கட்டி அணைத்து பாசத்தை வெளிப்படுத்திய காட்சி காப்பாற்றிய மீட்புக் குழுவினரை நெகிழச் செய்துள்ளது. பத்தே நிமிடத்தில் சிறுவனைப் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பெற்றோரும், அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories