தமிழ்நாடு

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்?-வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது என்ன?

வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது பெய்து வரும் கனமழை நாளை மட்டும் 8 மாவட்டங்களில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்?-வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று இரவு பெய்த மழை தற்போது வரை ஓயாமல் பெய்து வருகிறது. எனவே வெள்ளநீர் சாலைகளில் தேங்காமல் நிற்க தமிழக அரசு மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ". தமிழகம், புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும்.

வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்?-வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது என்ன?

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்தது. அதில் அதிகப்பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பூர் 12 செமீ, சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடம், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம் ARG, கும்மிடிப்பூண்டி, மண்டபம், பொன்னேரி பகுதிகளில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்?-வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது என்ன?

மேலும் இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர் உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலத்திலும் கனமழை வாய்ப்பு இருக்கிறது. நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்?-வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது என்ன?

அதோடு நாளை (நவம்பர் 2) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி என மொத்தம் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்து வரும் 3 நாட்களில் (நவம்பர் 3, 4, 5) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும்?-வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது என்ன?

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் கடந்த 72 ஆண்டுகாலத்தில் நவம்பர் 1-ம் தேதி 8 செ.மீ. மழை பதிவானது இது மூன்றாவது முறை. கடந்த 30 ஆண்டுகளில் நவம்பர் 1-ம் தேதி பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்" என்றார்.

banner

Related Stories

Related Stories