தமிழ்நாடு

“தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.. இருமொழி கொள்கைதான் எங்களது கொள்கை” : வைரமுத்து ஆவேசம் !

“தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள், அந்நியர்கள் படையெடுப்பால், மதத்தால், சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். தற்போது சட்டத்தால் எதிர்க்க பார்க்கிறார்கள்” என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

“தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.. இருமொழி கொள்கைதான் எங்களது கொள்கை” : வைரமுத்து ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு பல இன்னல்கள் கொடுத்து வருகின்றன. குறிப்பாக மொழி பிரச்னையையும் உருவாக்க முயன்று வருகிறது. அந்த வகையில், அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு, இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பரிந்துரை ஒன்றை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது. அதில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்ற நோக்கமும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு தற்போது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன. இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் இணைந்து கடந்த 15-ம் இந்தி திணிப்புக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

“தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.. இருமொழி கொள்கைதான் எங்களது கொள்கை” : வைரமுத்து ஆவேசம் !

இந்த நிலையில் இன்று இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கவிஞர் வைரமுத்து தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கலந்துகொண்டன. இந்த ஆர்பாட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்க முயல்கின்றன என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அப்போது கவிஞர் வைரமுத்து பேசுகையில், "ஒரு மூட்டை முந்திரி பருப்பில் 10 வண்டுகள் விழுந்தால், 10 மாதத்தில் பருக்கைகளாக இருக்கும். தமிழ் எனும் மொழியில் இந்தி எனும் வண்டு நுழைந்தால் என்ன ஆகும்?. மராட்டிய மொழியில் இந்தி நுழைந்தது, தற்போது மராட்டியம் தன் முகத்தையும் தனித்தன்மையையும் இழந்தது. அதே போல் போஜ்பூரி, மகதி உள்ளிட்ட வட இந்திய மொழிகள் இந்தி வந்ததால் அழிந்தது.

“தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.. இருமொழி கொள்கைதான் எங்களது கொள்கை” : வைரமுத்து ஆவேசம் !

தமிழை வெறும் மொழியாக மட்டும் தமிழன் கருதவில்லை. இந்திய ஒன்றியத்தில் தமிழ்தான் தமிழர்களின் அதிகாரம்; அதை கிழிப்பது சர்வாதிகாரம். இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணியில் இனி இடம்பெற முடியாது என மெல்ல மெல்ல திணிக்கப்படுகிறது.

தாய்மொழி தமிழ் - வாழ்வுக்கான மொழி, ஆங்கிலம் - வசதிக்கான மொழி. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை படித்தால் வாழ்வோடும் வசதியாக இருப்போம். இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும். ஒன்றிய அரசின் பரிந்துரை வெற்றுரை; புறந்தள்ள வேண்டியது நமது கடமை.

ஒன்றிய அரசின் அலுவல் மொழிக்காக குழு அமைக்கப்பட்டு உள்துறை அமைச்சர் தலைமையேற்று பரிந்துரைதான் மசோதா கொண்டுவரவில்லை என சிலர் கூறலாம். இதற்கு முன் இந்தி திணிப்பு கொசுக்கடி, மூட்டை பூச்சி கடிப்பது போல அதனை நசுக்கி விடலாம். ஆனால் தற்போதைய இந்தி திணிப்பு ஆடு வெட்டுவதற்கு காத்திருப்பதற்கு சமம்.

“தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.. இருமொழி கொள்கைதான் எங்களது கொள்கை” : வைரமுத்து ஆவேசம் !

1938, 1965 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை விட தற்போது மிகப்பெரிய எழுச்சி ஏற்பட வேண்டும். வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்துள்ளது. இது புதிதல்ல, இந்தி திணிப்பதும், தமிழன் எதிர்ப்பதும் 85 ஆண்டுகளாக நடைபெற்ற்று வருகிறது. தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள், அந்நியர்கள் படையெடுப்பால், மதத்தால், சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். தற்போது சட்டத்தால் எதிர்க்க பார்க்கிறார்கள்.

இந்தி மொழிக்கு வரலாறு குறைவு, இலக்கியங்கள் குறைவு. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழை எப்படி புறந்தள்ள முடியும் ?. தமிழ் மொழிக்காக அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரு மொழி கொள்கையை கட்டிக் காக்கின்றனர்.

“தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.. இருமொழி கொள்கைதான் எங்களது கொள்கை” : வைரமுத்து ஆவேசம் !

இருமொழி கொள்கைதான் எங்களது கொள்கை. ஐ.நா, மன்கிபாத் போன்ற இடங்களில் தமிழை பிரதமர் மேற்கோள் காட்டுவது மகிழ்ச்சி தான். ஆனால் சமஸ்கிருதத்திற்கு செலவு செய்யும் நீங்கள் தமிழுக்கு ஏன் குறைவான செலவு செய்கிறீர்கள் ? பிள்ளைகளை தமிழ் படிக்க வையுங்கள், தமிழில் உரையாடுங்கள், தமிழை எழுத படிக்க செல்லுங்கள்.

இந்தி மீது எந்த வெறுப்பும் இல்லை, இந்தியாவில் இந்தியும் ஒரு மொழி. அண்டை மாநில மொழிகளை, சகோதர்களை நாங்கள் மதிப்பது போல் இந்தியையும் மதிக்கிறோம். ஆனால் இந்தியை எந்தவிதத்திலும் திணிக்க கூடாது. இந்தி பேசாத மாநிலங்கள் கருத்தை கேட்டு விட்டு சட்டம் இயற்றுங்கள்" என்றார்.

banner

Related Stories

Related Stories