அரசியல்

எப்படி இந்தியை கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை ‘இந்தி தெரியாது போடா.’ - உதயநிதி !

மீண்டும் இந்தித் திணிப்பைக் கையில் எடுத்தால், திமுக சார்பில் டெல்லியில், உங்கள் அலுவலகத்தின் முன்பு எங்கள் போராட்டம் நடக்கும் என உதயநிதி ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எப்படி இந்தியை கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை ‘இந்தி தெரியாது போடா.’ - உதயநிதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு பல இன்னல்கள் கொடுத்து வருகின்றன. மேலும் மாநிலங்களின் உரிமைகள், விவசாய பிரச்னை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் பல கேடு விளைவிக்கும் செயல்களை முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக மொழி பிரச்னையையும் உருவாக்க முயன்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது. அதில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்ற நோக்கமும் இடம்பெற்றுள்ளது.

எப்படி இந்தியை கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை ‘இந்தி தெரியாது போடா.’ - உதயநிதி !

இதற்கு தற்போது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன. மேலும் மேற்கு வங்கம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை எடுத்திருக்கும் நிலையில், கேரள முதல்வர் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

எப்படி இந்தியை கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை ‘இந்தி தெரியாது போடா.’ - உதயநிதி !

இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று தி.மு.க. இளைஞர் அணியும்-மாணவர் அணியும் இணைந்து, இன்று காலை 9.00 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையேற்று, தயாநிதி எம்.பி., உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாநில உரிமைகளை ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார் என்று பேசினார்.

எப்படி இந்தியை கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை ‘இந்தி தெரியாது போடா.’ - உதயநிதி !

மேலும் பேசிய அவர், "எங்களுடைய மாநில உரிமைகளை ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். ஏனென்றால், நாங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதியின் வழியில் வந்தவர்கள். இந்தியை எதிர்த்த போராட்டத்தில்தான் முதன்முதலில் ஆட்சியில் அமர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். இப்போது மீண்டும் கழகம் ஆட்சியில் இருக்கிறது.

நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை `இந்தி தெரியாது போடா.’ அதை எப்போதும் சொல்லிக்கொண்டேயிருப்போம். மூன்று மொழிப்போர்களைச் சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதில் மூன்றாவது மொழிப்போரை வழிநடத்தியது திராவிட மாணவர்கள் இயக்கம். இளைஞர் அணி கடந்த நான்கு வருடங்களாக எந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தாலும் வெற்றிபெற்ரிருக்கிறோம். கண்டிப்பாக இந்தப் போராட்டத்திலும் வெற்றி பெறுவோம்.

எப்படி இந்தியை கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை ‘இந்தி தெரியாது போடா.’ - உதயநிதி !

தற்போது சென்னையில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். நீங்கள் மீண்டும் இந்தித் திணிப்பைக் கையில் எடுத்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவரின் அனுமதியுடன் டெல்லியில், உங்கள் அலுவலகத்தின் முன்பு எங்கள் போராட்டம் நடக்கும்.

இரண்டு நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் அண்ணாவின், கலைஞரின் புகைப்படத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு மக்கள் என்றும் இந்தித் திணிப்பை ஏற்க மாட்டார்கள். 2019-ல் பா.ஜ.க-வை விரட்டினோமோ அதேபோல 2024-லும் மீண்டும் விரட்டியடிப்பார்கள்" என்றார்.

banner

Related Stories

Related Stories