தமிழ்நாடு

இப்படி ஒரு மெசேஜ் வந்தா உஷாரா இருங்க.. பொதுமக்களை எச்சரித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!

மின்சார கட்டணம் என்ற பெயரில் குறுந்தகவல் மூலம் மோசடி நடைபெறுவதாக டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

இப்படி ஒரு மெசேஜ் வந்தா உஷாரா இருங்க.. பொதுமக்களை எச்சரித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொழில்நுட்பங்கள் வளருவதற்கு ஏற்ப மோசடி பேர்வழிகளும் தங்களை மேம்படுத்திக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

முதலில் வங்கியில் இருந்து பேசுவதுபோல ஆதார் கார்டு, பான் கார்டு எண்ணைப் பெற்று பணத்தைத் திருடி வந்தனர். பிறகு எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்கு கிப்ட் கிடைத்துள்ளது. இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என கூறி பணங்களை அபேஸ் செய்தனர்.

தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் பொதுமக்களின் ஆசைகளை முதலீடாக கொண்டு தங்கள் வேலையை காட்டி வருகின்றனர். இவர்களிடம் சாமானிய மக்கள் முதல் நடிகர்கள், எஸ்.பி.எஸ் அதிகாரிகள் என பலரும் ஏமாந்து உள்ளனர்.

இப்படி ஒரு மெசேஜ் வந்தா உஷாரா இருங்க.. பொதுமக்களை எச்சரித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!

இந்த Cyber குற்றங்கள் குறித்து போலிஸார் தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் கவனத்துடன் இல்லாததால் இப்படியான Cyber குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

தற்போது இன்றிரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மெசேஜ் அனுப்பு பண மோசடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்சார கட்டணம் என்ற பெயரில் குறுந்தகவல் மூலம் மோசடி நடைபெறுவதாக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ வெளியிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

அதில்,"உங்கள் வீட்டில் மின்சாரம் கட்டணம் கட்டவில்லை இன்றிரவுக்குள் உங்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படும், உடனடியாக இந்த நம்பரை காண்டக்ட் செய்யுங்கள் எனக்கூறி செல்போனிற்கு குறுந்தகவல் வரும். அதில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால், நீங்கள் அப்டேட் செய்யவில்லை, மின்சார கட்டணம் செலுத்த நாங்கள் உதவி புரிகிறோம் எனக்கூறுவர்.

அதன் பிறகு மின்சார ஊழியர் ஒருவர் பேசுவது போல தொடர்பு கொண்டு உங்களது மின்சார எண், கட்டணம் உள்ளிட்டவற்றை நம்புவது போல கச்சிதமாக தெரிவித்து, நாங்கள் அனுப்பும் ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் 10 ரூபாய் செலுத்தினால் போதும் இது போன்ற பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் பார்த்து கொள்வதாக அவர்கள் கூறுவர்.

இப்படி ஒரு மெசேஜ் வந்தா உஷாரா இருங்க.. பொதுமக்களை எச்சரித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!

இதனை நம்பி ஆப் மூலமாக 10 ரூபாய் செலுத்தினால், உங்களது வங்கி கணக்கின் விவரங்களை அவர்கள் திருடி வங்கியில் உள்ள அனைத்து பணத்தையும் மோசடி நபர்கள் கொள்ளையடிப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதே போன்ற மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், இந்த மோசடி நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது போன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்" என டிஜிபி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

banner

Related Stories

Related Stories