தமிழ்நாடு

விஷம் குடித்து மகனுடன் தாய் தற்கொலை.. போலிஸாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் குடித்து மகனுடன் தாய் தற்கொலை.. போலிஸாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவரது கணவர் வீரானந்தம். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், ஜெயபாரதி மற்றும் அரவது மகன் ஸ்ரீஹரி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இரண்டு பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விஷம் குடித்து மகனுடன் தாய் தற்கொலை.. போலிஸாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்!

பின்னர் வீட்டில் ஆய்வு செய்தபோது தற்கொலைக்கு முன்பு ஜெயபாரதி எழுதிய கடிதம் ஒன்று போலிஸாரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், "இந்த முடிவிற்கு யாரும் காரணமில்லை. கடந்த 8 வருடமாக எனது கணவர் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

விஷம் குடித்து மகனுடன் தாய் தற்கொலை.. போலிஸாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்!

அப்பாவுடன் சென்றுவிடு என மகனிடம் கூறினேன். ஆனால் அவன் கேட்கவில்லை. என்னுடனே அவனும் விஷம் குடித்துவிட்டான். எங்கள் உடலை கணவரிடமோ, எனது தந்தையிடமோ கொடுக்க வேண்டாம்" என உருக்கமாக எழுதிப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் எந்த விதமான உதவியும் செய்யாததால் மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories