தமிழ்நாடு

சாலையில் ஓடும் scooty-ல் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. வண்டியை போட்டுவிட்டு அலறியடித்து ஓடிய பெண்..

மகன் தாயுடன் பெண் ஒருவர் வண்டியில் சென்றுகொண்டிருந்த போது பாம்பு ஒன்று வெளியே வந்ததால், வண்டியை போட்டுவிட்டு அலறியடித்து அந்த பெண் ஓடியுள்ளார்.

சாலையில் ஓடும் scooty-ல் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. வண்டியை போட்டுவிட்டு அலறியடித்து ஓடிய பெண்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் வெளியில் தனது மகன் மற்றும் தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கரூர் ரவுண்டானா அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் இருந்து திடீரென பாம்பு வெளியேறியுள்ளது. இதனால் பயந்துபோன சரண்யா உடனே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு தனது மகன் மற்றும் தாயை கூட்டி நகர்ந்துவிட்டார்.

சாலையில் ஓடும் scooty-ல் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. வண்டியை போட்டுவிட்டு அலறியடித்து ஓடிய பெண்..

பின்னர் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், அந்த வண்டியின் பாகத்தை திறந்துபார்த்தபோது அடியில் பாம்பு இருப்பதை கண்டனர். இதையடுத்து பாம்பு பிடி வீரரை அழைத்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இரண்டு அடி நீள சாரை பாம்பை மீட்டனர்.

சாலையில் ஓடும் scooty-ல் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. வண்டியை போட்டுவிட்டு அலறியடித்து ஓடிய பெண்..

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பாம்பை பிடிப்பதற்காக வாகனம் முழுக்க அனைத்து பாகங்களும் பிரிக்கப்பட்டதால், மெக்கானிக்கை வரவழைத்து வண்டியை பழுது பார்க்க கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் வேறொரு வாகனத்தில் தங்கள் வீட்டிற்கு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories