தமிழ்நாடு

"புத்தி பேதலித்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கின்றார் பழனிசாமி".. அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

புத்தி பேதலித்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

"புத்தி பேதலித்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கின்றார் பழனிசாமி".. அமைச்சர் துரைமுருகன் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னைக் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூபாய் ரூ. 35 கோடியில் புதிய மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் தலையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

"புத்தி பேதலித்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கின்றார் பழனிசாமி".. அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "உச்ச நீதிமன்றத்தில் அணை கட்டக்கூடாது என்று வழக்கு நடைபெற்ற வருகிறது அதனைத் தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது. இதனை அறியாத எடப்பாடி பழனிச்சாமி புத்தி பேதலித்து ஏதேதோ பேசி வருகிறார் .

"புத்தி பேதலித்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கின்றார் பழனிசாமி".. அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் அணைகளைப் பராமரிப்பு செய்யாத காரணத்தினால் கிருஷ்ணகிரி பரணி குளம் ஆகிய ஆணைகள் எத்தனை மணிக்குத் தண்ணீர் வெளியேறுகிறது? இப்பொழுது அனைத்து அணைகளையும் பழுது பார்க்க உத்தரவிட்டு உள்ளோம். விரைவில் சரி செய்யப்படும்.

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு தி.மு.க-வின் கொள்கை பற்றித் தெரியாது. எந்த காலத்திலும் தீவிரவாதத்திற்கு தி.மு.க ஒரு போதும் துணை போகாது "என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories