தமிழ்நாடு

சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு.. மகள் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு.. மகள் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.பி.கே புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவரது மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதிக்கு சிந்துஜா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், மூன்று பேரும் மதுரை சென்று விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தனர். மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே வந்ததபோது கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்து மீது மோதியதியுள்ளது.

சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு.. மகள் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

இந்த விபத்தில் காரின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் சந்தானகிருஷ்ணன் அரவது மனைவி ராமலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மகள் சிந்துஜா படுகாயம் அடைந்துள்ளார்.

சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு.. மகள் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் படுகாயம் அடைந்த சிந்துஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். மேலும் உயிரிழந்த கணவன், மனைவி உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மகள் கண்முன்னே பெற்றோர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories