தமிழ்நாடு

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்!

செம்பரம்பாக்கம் ஏரியில் செல்ஃபி எடுக்கும் போது தவறிவிழுந்து நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விக்னேஷ் (20). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ் (16) 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நண்பர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்குச் சென்ற இவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு மதகின் அருகே இறங்கி தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்!

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்க முயன்றனர். மேலும் இது குறித்து உடனே தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்!

பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி நீண்ட நேரத்திற்கு இருவரின் உடலையும் இறந்த நிலையில் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்கள் இருவரும் செல்ஃபி எடுக்கும் போது ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories