தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் மனைவி திடீர் மரணம்.. கணவன் அதிர்ச்சி: போலிஸ் விசாரணை!

சென்னை விமான நிலையத்தில் குஜராத் மாநில தொழில் அதிபரின் மனைவி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மனைவி திடீர் மரணம்.. கணவன் அதிர்ச்சி:  போலிஸ்  விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு கிரி. தொழில் அதிபரான இவருடை மனைவி கமலா பீன். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு, இன்று அதிகாலை மற்றொரு இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அகமதாபாத் செல்வதாக இருந்தனர்.

இதன்படி தம்பதிகள் புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது விமானத்தை விட்டு இறங்கியபோது கமலா பீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமான ஊழியர்கள் அவரை விமானநிலைய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

சென்னை விமான நிலையத்தில் மனைவி திடீர் மரணம்.. கணவன் அதிர்ச்சி:  போலிஸ்  விசாரணை!

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் மனைவி திடீர் மரணம்.. கணவன் அதிர்ச்சி:  போலிஸ்  விசாரணை!

கணவன் மனைவியாக விமானத்தில் வந்ததில், மனைவி திடீரென சென்னை விமான நிலையத்தில், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories