இந்தியா

பழுதான பள்ளி லிப்ட்.. கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆசிரியை.. புதிதாக பணியில் சேர்ந்தவருக்கு நேர்ந்த சோகம்!

பள்ளியின் லிப்ட்டில் சிக்கி இளம் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழுதான பள்ளி லிப்ட்.. கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆசிரியை.. புதிதாக பணியில் சேர்ந்தவருக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பை மலாடு சிஞ்சோலி பந்தர் பகுதியில் இயங்கிவரும் உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெனல் பெர்னாண்டஸ் (வயது 26).

இவர் பள்ளியின் 6-வது மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் செல்வதற்காக 2-வது மாடிக்கு லிப்ட் ஏறியுள்ளார். அப்போது லிஃப்டின் முன் கதவு மூடப்படாத நிலையில் லிப்ட் நகரத்தொடங்கியுள்ளது.

பழுதான பள்ளி லிப்ட்.. கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆசிரியை.. புதிதாக பணியில் சேர்ந்தவருக்கு நேர்ந்த சோகம்!

இதில் லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார். லிப்ட் மேலே செல்ல செல்ல ஆசிரியரின் தலையில் பயங்கரமாக அடிபட்டுள்ளது. பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு வந்து அவரை மீட்டுள்ளனர். மேலும் அந்த காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பள்ளியில் சிறிது மாதத்துக்கு முன்புதான் அவர் பணியில் சேர்ந்ததாகவும் ஒரு வருடத்துக்கு முன்புதான் அவருக்கு திருமணம் முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பழுதான பள்ளி லிப்ட்.. கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆசிரியை.. புதிதாக பணியில் சேர்ந்தவருக்கு நேர்ந்த சோகம்!

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். சம்மந்தப்பட்ட அந்த லிப்ட் சிறிது நாட்களுக்கு முன்னர்தான் பழுது பார்க்கப்பட்டது என்றும் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இதுதான் முதல் முறை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories