வைரல்

அமேசான் நிறுவனம் மீது புகார் கொடுத்த இணையவாசி.. சிறிய தவறால் நேர்ந்த குழப்பம்.. நெட்டிசன்கள் கிண்டல் !

அமேசான் நிறுவனம் மீது ட்விட்டர்வாசி ஒருவர் புகார் அளித்தபோது, நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை டேக் செய்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமேசான் நிறுவனம் மீது புகார் கொடுத்த இணையவாசி.. சிறிய தவறால் நேர்ந்த குழப்பம்..  நெட்டிசன்கள் கிண்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம், ஐ-பேடுக்கு அதிக விலை போடுவதாக ட்விட்டர்வாசி ஒருவர் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை டேக் செய்து புகார் அளித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு அன்குர் ஷர்மா என்ற ட்விட்டர்வாசி ஒருவர், பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் மீது ட்விட்டர் வாயிலாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் "11 இன்ச் ஆப்பிள் ஐ-பேடு ப்ரோ ஒருபோதும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 900 ரூபாயாக (ரூ.1,76,900) இருந்ததில்லை. அவர்கள் மீது தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த புகாரில் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை டேக் செய்துள்ளார்.

அமேசான் நிறுவனம் மீது புகார் கொடுத்த இணையவாசி.. சிறிய தவறால் நேர்ந்த குழப்பம்..  நெட்டிசன்கள் கிண்டல் !

இந்த பதிவை கண்டதும் அவருக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம், "நாங்கள் உதவ விரும்புகிறோம். ஆனால்,தற்போது நாங்கள் இந்தியாவிற்கு மலிவு விலையில் விமானப் பயணத்தை வழங்குவதில் பிசியாக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டு பதிலளித்துள்ளது. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories