தமிழ்நாடு

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட பா.ஜ.க மூத்த நிர்வாகி.. முகம் சுளித்த சசிகலா புஸ்பா !

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தின்போது பாஜகவை சேர்ந்த சசிகலா புஸ்பாவிடம் மூத்த பாஜக நிர்வாகி ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்டவீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட பா.ஜ.க மூத்த நிர்வாகி.. முகம் சுளித்த சசிகலா புஸ்பா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 வது நினைவு தினம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவுகூறப்பட்டது. இதற்காக அவர் நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

தி.முக. சார்பாக உதயநிதி ஸ்டாலின் மரியாதையை செலுத்தினார். அதேபோல பா.ஜ.க சார்பாகவும் பல நிர்வாகிகள் கூட்டமாக நினைவிடத்தில் மரியாதை செய்தனர். அப்போது பாஜகவின் முக்கிய தலைவரான சசிகலா புஷ்பா மரியாதை செலுத்தினார்.

அப்போது அவரை சுற்றி அதிக அளவில் ஆண் நிர்வாகிகள் நின்று அவரை நெருக்கி தள்ளினார். அப்போது அவர் அருகில் நின்றுகொண்டிருந்த பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர் சசிகலா புஷ்பாவை இடித்துக்கொண்டு வந்து அநாகரிகமாக நடந்துகொண்டார்.

இந்த நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சசிகலா புஷ்பாவுக்கு நேர்ந்தது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், பலரும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories