தமிழ்நாடு

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் ஆசிரியர் .. யார் இந்த ராமச்சந்திரன்?

2022ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட  ராமநாதபுரம் ஆசிரியர் .. யார் இந்த ராமச்சந்திரன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் ஒன்றிய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கு 46 பேர் 'தேசிய நல்லாசிரியர் விருது'க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட  ராமநாதபுரம் ஆசிரியர் .. யார் இந்த ராமச்சந்திரன்?

யார் இந்த ராமச்சந்திரன்?

ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியம், கீழாம்புல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 14 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் கே. ராமச்சந்திரன்.

இந்த பள்ளியைத் தனியார் பள்ளிகளுக்குச் சவால் விடும் வகையில் மாற்றிக் காட்டியுள்ளார். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ், இணையச் சேவைகளைக் கையாள்வதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறார்.

மேலும் தனது சொந்த செலவில் மாணவர் இணைய வழியில் படிப்பதற்காக செல்போன்களை வாங்கி கொடுத்துள்ளார். அதேபோல் தனது ஊதியத்தில் வரும் பணத்தைக் கொண்டு மாணவர்களுக்கும், பள்ளிக்கும் உதவி செய்து வருகிறார் ராமச்சந்திரன்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட  ராமநாதபுரம் ஆசிரியர் .. யார் இந்த ராமச்சந்திரன்?

அந்த பணத்தில்தான் பள்ளியில் சி.சி.டி.வி, ஆர்.ஓ வாட்டர், இணைய வசதி, கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்து தனியார் பள்ளிக்கே சவால் விட்டு வருகிறார். இங்கிலாந்து நிறுவனம் இப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று கொடுத்துக் கவுரவித்துள்ளது.

இவரின் இந்த கல்விச் சேவையைப் பாராட்டி 2018ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை ராமச்சந்திரன் பெற்றுள்ளார். இந்நிலையில்தான் 2022ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மாணவர்களுடன் ஆசிரியர் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக ராமச்சந்திரன் பள்ளி சீருடை அணிந்தே தினமும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். "ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரையில் பள்ளி சீருடையிலேயேதான் பணியாற்றுவேன்" எனவும் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories