தமிழ்நாடு

'இந்த சமூகம் தவறாகதான் இருக்கிறது?" - மாணவி எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி தெளிவான விளக்கம் !

'நமது சமூகம் சரியாகத்தான் இருக்கிறதா?" என்று மாணவி எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி விளக்கமளித்துள்ளார்.

'இந்த சமூகம் தவறாகதான் இருக்கிறது?" - மாணவி எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி தெளிவான விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை Women's Christian College-ல் நேற்று International Studies துறையுடன் Youth Talks அமைப்பு இணைந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி., கனிமொழி கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் எம்.பி., கனிமொழியுடன் கலந்துரையாடினர்.

'இந்த சமூகம் தவறாகதான் இருக்கிறது?" - மாணவி எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி தெளிவான விளக்கம் !

அப்போது அந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவி ஒருவர், “இந்தச் சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கும் போதும், வீட்டில் இதுகுறித்துப் பேசும் போதும், 'இல்ல.. நீ சின்னப் பொண்ணு.. போய் படி, இதெல்லாம் உனக்குத் தெரியாது' என்று சொல்கிறார். அவர்கள் பின்பற்றுவதெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். நம் சமூகம் சரியாகத் தான் இருக்கிறதா? எனக்கு அது சரியானதாக இல்லை என்றே தோன்றுகிறது. எனில், சரியானதாக இருந்தால் நம்மை ஆண்-பெண் என்று பிரிக்கமாட்டார்களே.

“நீ வேலைக்கு போ.. நீ வீட்டுல சமை..” என்று சொல்லமாட்டார்களே. “நீயும் வேலைக்குப் போ.. இரண்டு பேரும் சேர்ந்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று தானே சொல்லவேண்டும். அப்படியானால், இச்சமூகம் தவறாகத் தானே இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

'இந்த சமூகம் தவறாகதான் இருக்கிறது?" - மாணவி எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி தெளிவான விளக்கம் !

அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி, "நிச்சயம், தவறாகத் தான் இருக்கிறது. அதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆண்-பெண் என்று பிரிப்பது மட்டுமில்லை, சாதி என்ற வகையில் பிரிக்கப்படுகிறோம். சாதிக்கு ஒன்றென வெவ்வேறு சுடுகாடுகளும், இடுகாடுகளும் இருக்கின்றன. ஊர்ப் பாதையில் நடக்க முடியாது. கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

தேநீர்க் கடைகளில் இந்தச் சாதிக்குக் கொடுத்த கிளாஸில் இன்னொரு சாதிக்குக் கொடுக்க மறுக்கிறார்கள். உலகில் எங்கு எடுத்துக் கொண்டாலும், மதத்தில் தொடங்கி ‘உன்னுடையதை விட என்னுடையது பெரியது’ என்ற எத்தனையோ பிரிவினைகள் இந்தச் சமூகத்தில் தொடர்ந்திருந்து கொண்டுதான் இருக்கின்றன.

'இந்த சமூகம் தவறாகதான் இருக்கிறது?" - மாணவி எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி தெளிவான விளக்கம் !

நாம் நிறைய இழந்திருக்கிறோம். மாற்றங்கள் தொடங்கியிருக்கிறது. பெண்கள் வேலைக்கு செல்கிறார். பெண்கள் சமமாக வாழ்வதற்கு வாய்ப்புகள் வந்திருக்கிறது. இதில், ஒரு நல்ல விஷயம் என்றால் நிறைய இடங்களில் சில மாற்றங்கள் நடக்கிறது. இங்கு, தமிழ்நாட்டில் எத்தனை பேர் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கொள்கிறோம்? அப்படிப் போடுவதற்கு வெட்கப் படுகிறோமில்லையா? அது பெருமை என்று நினைத்த காலத்தைக் கடந்து, இங்கு வந்திருக்கிறோம்.

'இந்த சமூகம் தவறாகதான் இருக்கிறது?" - மாணவி எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி தெளிவான விளக்கம் !

நாம் முன்னேறுவோம். தொடர்ந்து நாம் முன்னேறிக் கொண்டேயிருக்க வேண்டும். இதற்கு முன்னிருந்தவர்கள், இப்படியான பிற்போக்கான விஷயங்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். இதற்கு எதிராக தொடந்து நாம் போராட வேண்டும். நாளை அது உங்களின் பொறுப்பு. நிச்சயம் இந்த உலகம் சரியானதாக இல்லை. அது மாற்றப்பட்டு, முன்னேற்றிட வேண்டும். அது உங்களின் கைகளிலே உள்ளது. சமூகம் பற்றிய உங்களின் அக்கரை மகிழ்ச்சியளிக்கிறது. அதை மாற்ற நினைக்கும் உங்களின் எண்ணம் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது." என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories