தமிழ்நாடு

சென்னை ஒரு ரோல் மாடல்.. இன்னும் நிறையச் சம்பவங்கள் காத்திருக்கு: முதலமைச்சரின் சென்னை தின வாழ்த்து!

சென்னை தினத்தின் 383வது ஆண்டு இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை ஒரு ரோல் மாடல்..  இன்னும் நிறையச் சம்பவங்கள் காத்திருக்கு: முதலமைச்சரின்  சென்னை தின வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் நாள் சென்னை தினமாக (Madras Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இனம் - மொழி – மதம் - சாதி பேதமற்ற சமத்துவபுரமாகத் திகழும் சென்னையின் வளர்ச்சிக்கு சென்னை மக்களின் பங்கு மகத்தானது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வாய்ப்பு தேடியும் வாழ்வாதாரம் தேடியும் வருவோருக்குச் சென்னை அன்புமிகு அன்னையாகவே அரவணைக்கிறது என்றால் மிகையில்லை.

சென்னை ஒரு ரோல் மாடல்..  இன்னும் நிறையச் சம்பவங்கள் காத்திருக்கு: முதலமைச்சரின்  சென்னை தின வாழ்த்து!

அதேபோல் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சி காலத்தில்தான் மெட்ராஸ் என்பதற்குப் பதில் சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அண்ணா நூற்றாண்டு நூலம் என கலைஞர் ஆட்சியில்தான் அறிவு சார்ந்தும் தொழில் சார்ந்தும் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டது.

இந்நிலையில் 383ம் ஆண்டு சென்னை தினத்திற்குப் பலரும் வாழ்த்துகளையும் தங்களது நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 383வது சென்னை தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.

இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories