தமிழ்நாடு

இலவச திட்டம்- பிரதமர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது: ஆங்கில ஊடகங்களில் Data வைத்து அடித்து விளையாடும் PTR!

இலவச திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி, பா.ஜ.க-வினர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இலவச திட்டம்- பிரதமர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது: ஆங்கில ஊடகங்களில் Data வைத்து அடித்து விளையாடும் PTR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார்.மேலும், "இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியல் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்க வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன. மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி பதிலடி கொடுத்தார். இந்நிலையில், இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.அப்போது அதில் அவர் ஒன்றிய அரசை விமர்சித்து பேசியது பெரும் வைரலானது. பலரும் அவரின் அந்த பேச்சை பகிர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு வேகமான நாடகம் நடப்பதைப்போல நான் உணர்கிறேன். மிசையா, ராய், குரேஷி ஆகியோர் கூறியதை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

இவை அனைத்தும் தர்க்கரீதியானவை. சிந்தனைமிக்கவை, அரசியலமைப்பின் அடிப்படையிலானவை. பகுத்தறிவு சிந்தனையில் அடிப்படையிலானவை, புள்ளிவிவரங்களின் அடிப்படையிலானவை. அதனால் நாம் உச்சநீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருப்பது ஒரு கேலிக்கூத்து.

இலவச திட்டம்- பிரதமர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது: ஆங்கில ஊடகங்களில் Data வைத்து அடித்து விளையாடும் PTR!

அரசியலமைப்பின் எந்தவொரு இடத்திலும், கருவூலத்தின் பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்யலாம் என்று சொல்லப்படவில்லை. திடீரென உச்ச நீதிமன்றமானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு மக்களின் பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதை தங்கள் கடமையாக எண்ணும் வகையில் எத்தகைய அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று எனக்குப் புரியவில்லை.

இலவசக் கலாச்சாரம் பற்றிப் பேசும் இதே பிரதமர் அவர்கள் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலத்தில், அவருடைய கட்சியின் முதலமைச்சர் எப்படி இலவச பேருந்து பயணத்தை அறிவித்தார் என்று எனக்குப் புரியவில்லை. இலவசங்கள் என்பது தவறானது என்று சொல்லும் இதே பிரதமர். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்காக ஒரு நபருக்கு மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை எப்படி துவங்கி வைத்தார் என்று புரியவில்லை.

இது முக்கியப் பிரச்சனைகளை திசைதிருப்ப முயற்சி செய்யும் வகையிலான தெளிவான அரசியல். இது முழுக்க முழுக்க கேலிக்கூத்து என்று எந்தவொரு புள்ளிவிவரமும் எங்கேயும் சொல்லும். இந்த கேலிக்கூத்திற்கு எந்தவொரு மதிப்பும் இல்லை. இது ஒரு மோசமான நகைச்சுவை போன்றது" என தெரிவித்துள்ளார்.

இலவச திட்டம்- பிரதமர் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது: ஆங்கில ஊடகங்களில் Data வைத்து அடித்து விளையாடும் PTR!

இலவசத் திட்டங்கள் தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் வரிசை கட்டி தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜாவிடம் பேட்டு கண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டிகள் மூலம் இலவசத் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலம் சார்ந்ததே என Data வைத்து இந்தியாவிற்கே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாடம் எடுத்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories