தமிழ்நாடு

மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. முதியவர்களை குறிவைக்கும் கும்பல்: விசாரணையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூரில் மூதாட்டி கொலை வழக்கில் 2 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. முதியவர்களை குறிவைக்கும் கும்பல்: விசாரணையில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம், காந்திநகரில் கடந்த 5ம் தேதி சரோஜினி (82) என்ற மூதாட்டி வாயில் டேப் சுற்றப்பட்டு ,கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இவரது கொலை குறித்து 36 மணி நேரம் கழித்தே போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு போலிஸார் கொலையாளிகளைத் தேடி வந்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக 3 பேர் தப் ஓடுவதுபோன்று காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் காலை ரயில் மூலம் கோவை வந்த 3 பேரும் சம்பவ இடத்திற்கு வந்து கொலை் செய்து விட்டு மீண்டும் ரயில்மூலம் தப்பிச் செல்வது விசாரணையில் தெரிய வந்தது.

மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. முதியவர்களை குறிவைக்கும் கும்பல்: விசாரணையில் பகீர்!

இதையடுத்து இந்த மூன்று பேரில் இருவர் பெங்களூரிலும், ஒருவர் கன்னியாகுமரியிலும் இருப்பது போலிஸாருக்கு தெரியவந்தது. பின்னர் போலிஸார் பெங்களூருவிற்கும், கன்னியாகுமரிக்கும் சென்றனர்.

பிறகு கன்னியாகுமரியில் தலைமறைவாக இருந்த அபினேஷ் பாலகிருஷ்ணன்(24) மற்றும் மணிகண்ணன்(19) ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவன் ஒருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மூதாட்டியைக் கொன்று அவரது செயின் மற்றும் மோதிரத்தைத் திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.

மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. முதியவர்களை குறிவைக்கும் கும்பல்: விசாரணையில் பகீர்!

அவர்களிடமிருந்து செயின் மற்றும் மோதிரத்தைப் பறிமுதல் செய்த தனிப்படை போலிஸார், அவர்களிடம் துருவித்துருவி விசாரணை செய்ததில் கடந்த ஓராண்டுக்கு முன் அபினேஸ், கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டருகே தங்கியிருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் மூதாட்டி தனிமையில் இருப்பதைத் தெரிந்து கொண்டபின், தனது நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டி வீட்டிற்கு நகை திருட வந்துள்ளார்.

அப்போது, இவர்களை மூதாட்டி பார்த்துவிட்டதால் அவரின் வாயில் துணியை வைத்து அடைத்து டேப் சுற்றிகொலை செய்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் இதேபோன்று தனியாக வீட்டில் இருக்கும் முதியவர்களைக் குறிவைத்து கன்னியாகுமரி, பெங்களூரு போன்ற இடங்களில் கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories