உலகம்

French Fries-யால் வந்த சண்டை.. போலிஸுக்கு புகார் கொடுத்து WANTED-ஆக வந்து சிக்கிய கொலை குற்றவாளி !

கொலை குற்றத்தில் 4 ஆண்டுகள் பொலிஸுக்கு டிமிக்கி கொடுத்தவர் வித்தியாசமான முறையில் போலிஸில் சிக்கியுள்ளார்.

French Fries-யால் வந்த சண்டை.. போலிஸுக்கு புகார் கொடுத்து WANTED-ஆக வந்து சிக்கிய கொலை குற்றவாளி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு பெண்ணின் உடலை காருக்குள் வைத்து எரித்த வழக்கில் அன்டைன் சிம்ஸ் என்ற இளைஞரை போலிஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் போலிஸார் கண்களில் சிக்காமல் இருந்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடியும் போலிஸாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், அவரே போலிஸை அழைத்து வசமாக சிக்கியுள்ளார்.

French Fries-யால் வந்த சண்டை.. போலிஸுக்கு புகார் கொடுத்து WANTED-ஆக வந்து சிக்கிய கொலை குற்றவாளி !

அந்த இளைஞர் சம்பவத்தன்று அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் இருந்து ஒரு mcdonald கடைக்கு சென்று அங்கு ஒரு French Fries ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு அதற்கான ரசீது வழங்ப்படவில்லை. இதனால் கடும் கர்வம் அடைந்தவர் அங்கிருந்த ஊழியர்களை அழைத்துள்ளார்.

பின்னர் mcdonald ஊழியர்களிடம் அவர் இது தொடர்பாக கோவமாக பேசியுள்ளார். தவறுக்கு mcdonald ஊழியர்கள் வருத்தம் தெரிவித்த நிலையில் கோவம் அடங்காத அவர் போலிஸில் புகார் கொடுப்பதாக மிரட்டியுள்ளார். அதற்கு புகார் அளிக்கலாம் என ஊழியர்கள் கூறியதால் 911 என்ற காவல் எண்ணுக்கு அழைத்துள்ளார்.

அதன்படி அந்த கடைக்கு வந்த போலிஸாரிடம் கடையில் நடந்த தவறு குறித்து அன்டைன் சிம்ஸ் கூறியுள்ளார். அப்போது அவர் கொலை வழக்கில் தேடப்படுபவர் என்பது போலிஸாருக்கு தெரியவந்துள்ளது. போலிஸார் தன்னை அடையாளம் கண்டதை உணர்ந்த அன்டைன் சிம்ஸ் உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

ஆனால், அவரை விடாத போலிஸார் அவரை துரத்திச்சென்று கைது செய்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் பொலிஸின் பாக்கெட்டில் இருந்த கேமராவில் பதிவாகிய நிலையில், தற்போது இந்த வீடியோ வெளிவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories