தமிழ்நாடு

செய்யும் தொழிலே தெய்வம் : கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு உண்டியலை பக்திமயமாக கொள்ளை அடித்த திருடன் !

மத்திய பிரதேசத்தில் சாமி கும்பிட்டுக் கோயில் உண்டியலையே மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

செய்யும் தொழிலே தெய்வம் : கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு உண்டியலை பக்திமயமாக கொள்ளை அடித்த திருடன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், சுகா என்ற கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடிச் சென்றுள்ளார்.

தற்போது மர்ம நபர் கோவில் உண்டியல் திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இணைய வாசிகள் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறனர்.

இதற்குக் காரணம் அந்த மர்ம நபர் கோயில் உண்டியலைத் திருடுவதற்கு முன்பு சில நிமிடம் சாமி கும்பிட்டுள்ளார். இதனால்தான் இணைய வாசிகள் செய்யும் தொழிலே தெய்வம். அதனால் சாமி கும்பிட்டு உண்டையலை திருடிச் சென்றுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories