தமிழ்நாடு

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து?.. பட்டியலிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

ஒன்றிய அரசின் மின்சார சட்டத்திருந்த மசோதாவால் 100 யூனிட் இலவசம் மின்சாரம் உட்பட அனைத்து வகையான இலவச மின்சாரமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து?.. பட்டியலிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மின்சாரதுறையை முழுவதும் தனியார மயமாக்கும் முயற்சி என ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மின்சார சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து?.. பட்டியலிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, "நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். ஏழை மக்களை இந்த மசோதா பாதிக்கும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர் பாலுவும் கடுமையாக இன்று மசோதாவை எதிர்த்து தி.மு.க-வின் குரலை பதிவு செய்தார். இந்த சட்ட மசோதா நிறைவேறினால் தனியார் துறைகள் மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து?.. பட்டியலிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

மேலும், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம்,100 யூனிட் இலவச மின்சாரம், விசைதரி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம் என அனைத்தும் பாதிக்கப்படும்.

ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது. மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே தி.மு.க தான். இந்த சட்ட மசோதாவை எதிர்த்து தி.மு.க தொடர்ந்து முழு குரல் எழுப்பும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories