தமிழ்நாடு

மனைவியோடு சண்டை.. மச்சினி மேல் காதல்..வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞர் கைது !

மனைவியின் தங்கையை வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியோடு சண்டை.. மச்சினி மேல் காதல்..வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞர் கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருப்பத்தூர் மாவட்டம், பூங்குளம் செட்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 23), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (வயது 21) என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில நாட்களாக இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களாக தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் பின்னர் ராஜேஷ்க்கு தனது மனைவியின் 19 வயது தங்கை மீது காதல் ஏற்பட்டுள்ளது.

மனைவியோடு சண்டை.. மச்சினி மேல் காதல்..வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞர் கைது !

இந்த நிலையில், கடந்த 27ம் தேதி இரவு நேரத்தில் சாலையில் வந்துகொண்டிருந்த மனைவியின் தங்கையை வழிமறித்து அவர்மீது திரவம் ஒன்றை வீசியுள்ளார். திரவம் உடம்பில் பட்டதால் ஆசிட் என நினைத்த அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டுள்ளார். இதனால் ராஜேஷ் அங்கிருந்து உடனே தப்பி சென்றுள்ளார்.

இளம்பெண்ணின் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடல் முழுவதும் எரிச்சலாக இருப்பதாக இருப்பதாக கூறியதால் அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் மீது பட்டது ஆசிட் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மனைவியோடு சண்டை.. மச்சினி மேல் காதல்..வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞர் கைது !

பின்னர் அங்கிருந்த வந்த அந்த இளம்பெண் ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி புகாரை பெற்று வழக்கு பதிவு செய்த போலிஸார் ராஜேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் தங்கை மீது காதல் வசப்பட்டு அவரை மயக்கி வசியம் செய்ய மந்திரித்த தண்ணீரை ஊற்றியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் ராஜேஷை திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலிஸார் பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories