தமிழ்நாடு

NEET முதல் GST வரை.. ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை மலையாளத்தில் புட்டுபுட்டு வைத்த முதல்வர்!

இந்தியாவின் மிக நீண்ட வரலாறும் - இந்திய மக்களின் சகோதர உணர்வும் –இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

NEET முதல் GST வரை..  ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை மலையாளத்தில் புட்டுபுட்டு வைத்த முதல்வர்!
ashwin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.7.2022) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

மாநில அரசுகள் மிகச்சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால் ஒன்றிய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது!

இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான்!

மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளைத் தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும்.

இந்திய அரசானது கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்தியாவை ‘ஏகஷிலா சம்ஸ்காரமாயி’ மாற்றுந்நது நமக்கு ஒரிக்கலும் அங்கீகரிக்கான் ஆவில்லா!

(ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது.)

இதினே, நம்மள் ஒருமிச்சி, சக்தமாயி எதிர்க்கணும்!

(அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.)

பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில்- பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை.

இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை!

NEET முதல் GST வரை..  ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை மலையாளத்தில் புட்டுபுட்டு வைத்த முதல்வர்!

GST has robbed states, of their fiscal autonomy. GST compensation amount is not released on time. And not fully also.

(சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை.)

Entrance Exams like NEET deny education to the oppressed.

(நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.)

National Education Policy 2020 is a barrier to education.

(புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது.)

The policies of Union Govt are Anti-people.

(ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன.)

BJP attempts to run parallel governments, through its Governors.

(ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை.)

We have to govern our states, even as we face, all these hurdles.

NEET முதல் GST வரை..  ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை மலையாளத்தில் புட்டுபுட்டு வைத்த முதல்வர்!

(இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும்.

அரசியல் நடத்தியாக வேண்டும்.)

And we have to fulfill the needs and expectations of people as well.

(மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும்.)

But I am still hopeful!

(அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை.)

இந்தியாவின் மிக நீண்ட வரலாறும் - இந்திய மக்களின் சகோதர உணர்வும் –இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories