தமிழ்நாடு

ப்ப்பா..! 3500 வகையான உணவு.. செஸ் வீரர்களுக்கு தடல்புடல் விருந்து - அமர்க்களப்படுத்தும் தமிழ்நாடு அரசு !

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு 14 நாட்களுக்கு 3500 வகையான உணவுகளை தமிழ்நாடு அரசு விருந்தோம்பலாக அளிக்கவுள்ளது.

ப்ப்பா..! 3500 வகையான உணவு.. செஸ் வீரர்களுக்கு தடல்புடல் விருந்து - அமர்க்களப்படுத்தும் தமிழ்நாடு அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் இந்தாண்டு, தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித்தொடரில், பங்குபெற 187 நாடுகளில் இருந்து, 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். உலகில் பல நாடுகளில் இருக்கும் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் இந்த போட்டித்தொடரில் விளையாடி வெற்றிபெற ஆவலுடன் இருக்கிறார்கள்.

ப்ப்பா..! 3500 வகையான உணவு.. செஸ் வீரர்களுக்கு தடல்புடல் விருந்து - அமர்க்களப்படுத்தும் தமிழ்நாடு அரசு !

இந்த நிலையில், போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு எந்த வித குறையும் ஏற்படாத வகையில் கவனமாக பார்த்துக்கொள்ளும் தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அந்த வகையில் 3500 வகை உணவுகளை தயாரிக்கவுள்ளது.

போட்டி நடைபெறும் இந்த 14 நாட்களிலும், போட்டியாளர்களுக்கு விருப்பமான, ஒவ்வொரு நாட்டின் சிறப்பு உணவுகளை ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதற்காக 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உணவு ஏற்பாடுகளுக்காக இந்தியாவின் முன்னணி சமையற்கலைஞரான 50 ஆண்டுகால அனுபவமிக்க சென்னையைச் சேர்ந்த ஜி.எஸ். தல்வார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ப்ப்பா..! 3500 வகையான உணவு.. செஸ் வீரர்களுக்கு தடல்புடல் விருந்து - அமர்க்களப்படுத்தும் தமிழ்நாடு அரசு !

இந்த உணவு வகைகளில் பிரதான உணவான சூப், பழச்சாறு, வையின், பீர் உள்ளிட்ட பானங்கள், மேலும் பல்வேறு நாட்டின் சிறப்பு உணவுகள் என பல இந்த உணவு பட்டியலில் இடம்பெறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருமுறை பரிமாறப்பட்ட உணவு வகை, மறுமுறை பரிமாறாத வகையில் ஏறத்தாழ 3500 வகை உணவுகள் தயார்செய்யப்படவுள்ளனர். இதில் தமிழ்நாடு பாரம்பரிய உணவுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ப்பா..! 3500 வகையான உணவு.. செஸ் வீரர்களுக்கு தடல்புடல் விருந்து - அமர்க்களப்படுத்தும் தமிழ்நாடு அரசு !

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, தமது விருந்தினர்களுக்கு 6 சுவை உணவோடு விருந்தளிப்பது நமது பரம்பரியத்தில் ஒன்று. அந்த வகையில் விருந்தினராக தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் 2000-க்கும் மேற்பட்டவர்களுக்கு 3500 வகை உணவுகளை தமிழ்நாடு அரசு விருந்தோம்பலாக அளிக்கவுள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பெரும் பாராட்டை பெற்றுவருகிறது.

banner

Related Stories

Related Stories