தமிழ்நாடு

வழிவிடாததால் ஆத்திரமடைந்த சிறுமி.. காதுகேளாத நபர் குத்தி கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு !

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழிவிடாத நபரை சிறுமி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழிவிடாததால் ஆத்திரமடைந்த சிறுமி.. காதுகேளாத நபர் குத்தி கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களது முன்பு நபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிவிட கோரி, ஹார்ன் அடித்து கொண்டே இருந்துள்ளார். இருப்பினும் முன்னால் சென்று கொண்டிருந்த நபர் வழி விடததால் சிறுமிக்கு கோபம் வந்துள்ளது.

எனவே சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி முன்னே சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தி சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையில் அந்த நபர் எதுவும் பேசாமல் இருக்க இதில் ஆத்திரமடைந்த சிறுமி, தனது கையில் வைத்திருந்த சிறு கத்தியால் அவரது கழுத்தில் குத்தியுள்ளார்.

வழிவிடாததால் ஆத்திரமடைந்த சிறுமி.. காதுகேளாத நபர் குத்தி கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு !

இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தின்ல் கீழே விழுந்த நபரை கண்டதும் தனது தாயை தனியே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர், கத்தியால் தாக்கப்பட்ட நபரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரிக்கையில், இறந்துபோனவருக்கு காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமியை வீடு தேடி சென்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழிவிடாததால் ஆத்திரமடைந்த சிறுமி.. காதுகேளாத நபர் குத்தி கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு !

சாலையில் வழி விடாததால், ஆத்திரமடைந்த சிறுமி, ஒரு மாற்றுத்திறனாளியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories