தமிழ்நாடு

சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி கோர விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாப பலி - 13 பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே டாடா ஏஸ் சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி கோர விபத்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி கோர விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாப பலி - 13 பேர் படுகாயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராமநாதபுரம் மாவட்டம் கழுவன்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் இருக்கன்குடி சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று டாடா ஏஸ் சரக்குவாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது.

இதில் டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த ஓடையில் சென்று விழுந்தது. கார் தலைகீழாக கவிழ்ந்து சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில், டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 13 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories