தமிழ்நாடு

2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்த தாய்: மகளுடன் சேர்ந்து TNPSC குரூப் 4 தேர்வு எழுதிய நிகழ்வு !

ஒரே தேர்வு மையத்தில் தாயும் மகளும் TNPSC குரூப் 4 தேர்வு எழுதியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்த தாய்: மகளுடன் சேர்ந்து TNPSC குரூப் 4 தேர்வு எழுதிய நிகழ்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி - ரவி தம்பதியினர். 12-ம் வகுப்பு வரை படித்திருந்த வளர்மதி (47), முன்பு இரண்டு முறை TNPSC குரூப் தேர்வை எழுதினார். சில இதையடுத்து அவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், படிப்பு, தேர்வு குறித்து அவருக்கு யோசிக்க கூட நேரமில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்த தாய்: மகளுடன் சேர்ந்து TNPSC குரூப் 4 தேர்வு எழுதிய நிகழ்வு !

இவருக்கு தற்போது மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பி.ஏ. பட்டப்படிப்பை தொலைத்தொடர்கல்வி மூலம் முடித்தார். இவரது ஒரு மகள், 12ஆம் வகுப்பு முடித்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்த தாய்: மகளுடன் சேர்ந்து TNPSC குரூப் 4 தேர்வு எழுதிய நிகழ்வு !

இந்த நிலையில், தனது மகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மகளுடன் சேர்ந்து தானும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க யோசித்துள்ளார். அதன்படி விண்ணப்பித்தும் உள்ளார். இன்று TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், இருவருக்கும் திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.

தாயும் மகளும் ஒரே தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு எழுதியுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories