தமிழ்நாடு

லேசான மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம்.. வெளிவந்த அ.தி.மு.க ஆட்சியின் அவலம்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் சிறிய மழைக்கே ஒழுகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லேசான மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம்.. வெளிவந்த அ.தி.மு.க ஆட்சியின் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சியின் கட்டப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.

வேலுரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.

அதை மெய்ப்பிக்கும் வகையில் திறந்து சில நாட்களே ஆன நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

லேசான மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம்.. வெளிவந்த அ.தி.மு.க ஆட்சியின் அவலம்!

இந்த நிலையில், தற்போது வேலூர் சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்து வரும் நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையிலிருந்து மழை நீர் ஒழுகியது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய பேருந்து நிலைய ஓட்டை குறித்து பேசிய அதிகாரிகள் ``கட்டடத்தின் மேற்கூரையில் கழுகு உள்ளிட்ட பறவைகள் வந்து கொத்துவதால் ஓட்டை ஏற்படுகிறது. அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories