தமிழ்நாடு

"அதிமுக பொதுச்செயலாளர் சிறைக்குதான் செல்வார்,கட்சி வரலாறு அப்படி" -EPS எதிர்காலத்தை சொன்ன ராஜீவ் காந்தி!

அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கபடுபவர்கள் சிறைக்கு செல்வது வரலாறு என திமுகவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"அதிமுக பொதுச்செயலாளர் சிறைக்குதான் செல்வார்,கட்சி வரலாறு அப்படி" -EPS எதிர்காலத்தை சொன்ன ராஜீவ் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு எழுந்தது. எடப்பாடியின் கீழ் ஒற்றை தலைமையாக அனைவரும் இணையவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் பேச அதற்கு ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 24ம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, ஒ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜெ.சி.பி. பிரபாகரன் ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னரே எந்த கட்சியிலும் நடக்காத உச்சபட்ச காட்சிகள் அங்கு நடந்தேறியது.

இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் என இரண்டு தரப்பு ஆதரவாளர்களாலும் முன்வைக்கப்பட்ட 23 தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்டன. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் முன்வைத்து நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் 23 தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்பட்டதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.

"அதிமுக பொதுச்செயலாளர் சிறைக்குதான் செல்வார்,கட்சி வரலாறு அப்படி" -EPS எதிர்காலத்தை சொன்ன ராஜீவ் காந்தி!

மேலும் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தார். இதனிடையே ஒ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என முழக்கமிட்டு பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். மேலும் ஜூலை 11-தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு அறிவிப்பு செல்லாது எனவும், அ.தி.மு.கவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் எனவும் கூறினார். இதன் காரணமாக அ.தி.மு.க பொதுகுழுவில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் தனது கடைசி முயற்சியாக, அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றால் கலவரம் வரலாம் என்பதால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஒ.பி.எஸ் ஆதரவாளர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றது. அதில் எடப்பாடி தற்காலிக அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், அதிமுக தலைமை அலுவலகத்தை பழனிசாமி தரப்பினர் பூட்டியதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தரப்பினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திக்கொண்டனர்.அதன்பின்னர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க தலைமை அலுவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் எடப்பாடி மற்றும் முனிசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை அதிகரித்ததால், அங்கிருந்த பன்னீர்செல்வத்தை வெளியேற்றி அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி ட்விட்டரில், "என்னை பழைய பழனிச்சாமினா நினைச்சிங்க!! இல்லைங்க அய்யா!! பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொதுச்செயலாளர் சசிகலா போன்று.. ஊழல் வழக்கில் சிறைக்கு போக இருக்கும் புதிய பொதுச்செயலாளர் பழனிச்சாமி என்றுதான் நினைக்கிறோம்!! உங்க கட்சி பொதுச்செயலாளர் பதவி வரலாறு அப்படி!" என பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories