தமிழ்நாடு

வீட்டில் விளையாடிய 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 50 வயது முதியவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை !

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது தீர்ப்பு வழங்கியது காரைக்கால் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் விளையாடிய 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 50 வயது முதியவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அடுத்த கீழ பொன்பேத்தி, சேவகன் பேட்டை சேர்ந்தவர் ஜெயராமன் (50) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கடந்த 22.12.2020 அன்று அதே பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை கட்டாயமாக பலவந்தபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இது தொடர்பான புகாரை நெடுங்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காரைக்கால் போகோ சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அல்லி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வீட்டில் விளையாடிய 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 50 வயது முதியவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை !

அதன்படி குற்றவாளியான பெயிண்டர் ஜெயராமனுக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் சிறுமியையும் சிறுமியின் பெற்றோரையும் கொலை மிரட்டல் விடுவதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மொத்தம் 22 ஆண்டுகள் விதித்தது.

ஆயிரம் ரூபாய் அபதாரத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது தீர்ப்பு வழங்கியது காரைக்கால் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories