தமிழ்நாடு

மனைவி வளைகாப்பு விழாவில் ‘மீண்டும் மஞ்சப்பை’ : தி.மு.க நிர்வாகி அசத்தல் - குவியும் பாராட்டு!

மனைவி வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு மஞ்சப்பையுடன் விதை பந்தையும் வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி வளைகாப்பு விழாவில் ‘மீண்டும் மஞ்சப்பை’ : தி.மு.க நிர்வாகி அசத்தல் - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து செய்லபடுத்தி கொண்டிருக்கின்றனர். மேலும் இயற்கை சூழல்களை காப்பதற்கான முயற்சிகளையும் தீவிரமாக எடுத்து வருகின்றனர். அதற்கு முதற்கட்டமாக பிளாஸ்டிக் ஒழிப்பை கையிலெடுத்தனர்.

தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றும் விதமாக பிளாஸ்டிக்குக்கு ‘குட்பை' சொல்லும் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த 'மஞ்சப்பை' விழிப்புணர்வு இயக்கம் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற தலைப்புடன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. தமிழர்களின் கலாச்சாரமாக கருதப்படும் இந்த 'மஞ்சப்பை', பிளாஸ்டிக் ஒழிப்புக்கான ஆயுதமாக கையிலெடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மனைவி வளைகாப்பு விழாவில் ‘மீண்டும் மஞ்சப்பை’ : தி.மு.க நிர்வாகி அசத்தல் - குவியும் பாராட்டு!

தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை 'பிளாஸ்டிக் ஒழிப்பு' மற்றும் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது திமுக தொண்டர் ஒருவர், தனது மனைவியின் வளைகாப்பு விழாவில் தாம்பூல கவருக்கு பதிலாக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற தலைப்புடன் கூடிய மஞ்சப்பையை விருந்தினர்களுக்கு அளித்துள்ளார். இவரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

மனைவி வளைகாப்பு விழாவில் ‘மீண்டும் மஞ்சப்பை’ : தி.மு.க நிர்வாகி அசத்தல் - குவியும் பாராட்டு!

இது குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தேவனூர் புதூர் கூடால்பட்டி அருகே இருக்கக்கூடிய, அழகான கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஹரி மற்றும் கிருத்திகா.

அவர்களுடைய கட்டுச்சாத விருந்தான சீமந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் கொம்பு மஞ்சள், வெற்றிலை பாக்கு, வளையல், கடலை மிட்டாய், விதை உருண்டைகள், தண்ணீர் பருகுவதற்கு நெகிழி அல்லாது செய்யப்பட்ட தண்ணீர் குடுவை.

இது எல்லாம் நமது தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிமுகப்படுத்திய மீண்டும் மஞ்சப்பையிலே அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். இந்த கழக உடன்பிறப்பிற்குக் கழக சுற்றுச்சூழல் அணியின் சார்பாகத் தலைவரின் திட்டத்தைத் எடுத்துச் சென்ற ஹரி மற்றும் கிருத்திகா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திருமணங்கள் நிச்சயதார்த்தம் இது போன்ற விழாக்கள் எல்லாம் நடக்கும் பொழுது, முடிந்த அளவுக்கு நாம் நெகிழியைப் பயன்படுத்தாமல் ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த வித சான்றுகளே இல்லா அளவுக்கு நாம் நிகழ்வுகளை நடத்த வேண்டும்.

பசுமையான, நெகிழி இல்லாத, குப்பை இல்லாத தமிழ்நாட்டையும் உலகத்தையும் உருவாக்கப் பாடுபடுவோம்." என்று அவர்களை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

banner

Related Stories

Related Stories