தமிழ்நாடு

“கருவில் இருப்பது ஆணா ? பெண்ணா? என கண்டுபிடித்து கருக்கலைப்பு” - போலி மருத்துவர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டுபிடித்து கருக்கலைப்பில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“கருவில் இருப்பது ஆணா ? பெண்ணா? என கண்டுபிடித்து கருக்கலைப்பு” - போலி மருத்துவர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தர்மபுரியில் நவீன ஸ்கேன் கருவியுடன் வீடுகளுக்கே சென்று, கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா? என கண்டறிந்து, கருக்கலைப்பில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்த தேவராஜ் மகன் சதீஷ்குமார் (37). இவர் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மினி ஸ்கேன் மிஷின் கொண்டு கர்ப்பிணி பெண்களை ஏமாற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறியப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

“கருவில் இருப்பது ஆணா ? பெண்ணா? என கண்டுபிடித்து கருக்கலைப்பு” - போலி மருத்துவர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

கடந்த மே 28 ம் தேதி தருமபுரி நகர காவல் துறையினர் சதீஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கையும் கழுவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் இவர்கள் 7 பேர் மீதும் பாலின தடை சட்டத்தின் படி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார் தொடர்ந்து இதுபோன்று குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வருவதால் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, சதீஷ்குமாரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி சேலம் மத்திய சிறைச்சாலை இருக்கும் சதீஷ்குமாருக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை காவல் துறையினர் வழங்கினர்.

banner

Related Stories

Related Stories