தமிழ்நாடு

“யானை வரும் பாதையில் நின்ற மனிதன்.. ஒருநிமிடம் அவகாசம் கொடுத்த யானை”: மனிதனுக்கு யானை சொல்லும் சேதி என்ன?

யானை நடந்த பாதையில் நின்று இருந்த மனிதன், ஒரு நிமிடம் அவர் செல்வதற்கு வழி விட்ட யானை வீடியோ வைரலாகி வருகிறது.

“யானை வரும் பாதையில் நின்ற மனிதன்.. ஒருநிமிடம் அவகாசம் கொடுத்த யானை”: மனிதனுக்கு யானை சொல்லும் சேதி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

யானை மனிதர்களுக்கு கொடுக்கும் ஒரு சில நிமிடங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் உயிர் பிழைக்கலாம் என நீலகிரி மாவட்ட வன பாதுகாவலர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெங்கடேஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்த வீடியோவில் ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அந்த நபர் யானை வருவது தெரியாமல் நின்று எதையோ பார்த்து கொண்டிருக்கிறார்.

“யானை வரும் பாதையில் நின்ற மனிதன்.. ஒருநிமிடம் அவகாசம் கொடுத்த யானை”: மனிதனுக்கு யானை சொல்லும் சேதி என்ன?

அந்த யானையும் வரும் வழியில் அங்கு ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார் என்பதை அறிகிறது. இருப்பினும் அந்த யானை அவரை தாக்காமல் அந்த நபருக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டு ஓடி வந்து விட்டார். எனவே யானை வரும் பொழுது நாம் ஜாக்கிரதையாக இருந்து அதற்கு தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலே யானை அதன் வழியில் சென்று விடும்.

ஆனால் பல நேரங்களில் யானையால் நிகழ்ந்த மனித இழப்புகளை பார்க்கும்பொழுது இவ்வாறு இல்லை. பலர் மது அருந்தி யானைக்கு எதிரே சென்ற பொழுதும், யானை வருவது தெரிந்தும் எதிரே சென்றதாலும், யானை வரும் பொழுது அதை சீண்டியதாலும் தான் இறப்பு நடந்திருக்கிறது.

எனவே யானை கொடுக்கும் அந்த சிறு நேரத்தை நாம் புத்திசாலிதனமாக பயன்படுத்தினால் யானையிடம் இருந்து உயிர் பிழைக்கலாம் என

banner

Related Stories

Related Stories