இந்தியா

ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு.. கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த வனத்துறை!

ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட காட்டு யானை உயிரிழந்தது.

ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு..  கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த வனத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மைசூர் மாவட்டம் கபினி அணையைச் சுற்றி பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இங்கு போகேஸ்வரன் என்ற காட்டு யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக சுற்றிவரும். இதனாலேயே இந்த போகேஸ்வரன் யானையை அப்பகுதி மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும், ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும் இது. அதன் தந்தங்கள் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும். தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு அதன் தந்தங்கள் இருக்கும்.

இந்நிலையில் 68 வயதான போகேஸ்வரன் யானை,பந்திப்பூர் வனப்பகுதியில் நேற்று இறந்துகிடந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறையினர், யானையின் 2 தந்தங்களை வெட்டி எடுத்தனர். இதையடுத்து அதேபகுதியில் யானையின் உடலை அருகே குழிதோண்டி வனத்துறை அதிகாரிகள் புதைத்துக் யானைக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும்,நீளமான தந்தங்களால் உணவு எதுவும் சாப்பிட முடியாமல் யானை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட இந்த யானை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories