தமிழ்நாடு

தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க முயற்சி! சதியை முறியடித்த திமுக கூட்டணி கட்சி எம்.பி!

தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க நடைபெற்ற முயற்சி எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க முயற்சி! சதியை முறியடித்த திமுக கூட்டணி கட்சி எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசு பணிகளில் வட மாநிலத்தவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளது. அதை பல முறை கண்டித்தும் இது போன்ற செயல்கள் தொடர் கதையாகி வருகின்றன.

இந்த நிலையில் தெற்கு ரயில்வே காலிப் பணியிடங்களில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பணியிடங்கள் சென்னை தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க முயற்சி! சதியை முறியடித்த திமுக கூட்டணி கட்சி எம்.பி!

இது தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னை ஆர் ஆர் பி தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டு விட்டு கோரக்பூர் தேர்வர்கள் 55 பேரை நியமிக்க எடுத்த முடிவு எனது தலையீட்டின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு தெற்கு ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் இருந்த 17 பேருக்கு முதலில் வேலை அளிக்கப்பட்டது. இப்போது மீதி 39 பேருக்கு வேலை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து சென்னை ஆர் ஆர் பி தேர்வர்களும் வேலை பெறுகிறார்கள்.

இதன் மூலம் இனி சம்பந்தப்பட்ட ரயில்வேயைச் சேர்ந்தவர்களை விட்டுவிட்டு வேறு ரயில்வே தேர்வர்களை நியமிக்கும் பழக்கம் எதிர்காலத்தில் கைவிடப்படும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இத்துடன் மெரிட்டில் தேர்வாகி மருத்துவ தகுதி மறு ஆய்வில் தகுதி பெற்ற ஐந்து பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியல் தேர்வர்களின் பட்டியல் 2 ஆண்டுகளை தாண்டி விட்டதால் அவர்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை வைக்கப்படும் என்று தெரிகிறது. இதனை தாராள மனப்பான்மையுடன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையில் சேர இருக்கிற காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories