விளையாட்டு

"இப்போ பேசுடா பார்ப்போம்"- ரசிகர்களிடம் ஆவேசமான விராட் கோலி! காரணம் என்ன?

இந்திய அணியின் இளம் வீரரை கேலி செய்த ரசிகர்களிடம் விராட் கோலி ஆவேசமாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"இப்போ பேசுடா பார்ப்போம்"- ரசிகர்களிடம் ஆவேசமான விராட் கோலி! காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி உள்ளிட்ட மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், தற்போது லீசெஸ்டர் அணியுடன் பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.

kamlesh nagarkoti
kamlesh nagarkoti

இந்த போட்டியின்போது இந்திய அணியின் இளம் வீரரான கம்லேஷ் நாகர்கோட்டி பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் அவரை கிண்டலடித்துள்ளனர்.

இந்த காட்சியை மாடியில் இருந்து பார்த்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நாகர்கோட்டியை கிண்டல் செய்த ரசிகர்களை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நாகர்கோட்டியை கேலி செய்த ரசிகர்கள் அமைதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோலி ஆவேசமான ரசிகர்களிடம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories