தமிழ்நாடு

காதலித்து ஏமாற்றிவிட்டு, காதலியை படுகொலை செய்த காதலன்.. பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஆண்டிபட்டி அருகே பட்டியலின இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காதலித்து ஏமாற்றிவிட்டு, காதலியை படுகொலை செய்த காதலன்.. பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகிதாசன் (23). இவர் கடந்த 2011ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 21வயது இளம்பெண் ஜெயப்பிரதா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி காதலித்து வந்துள்ளார்.‌ அதனைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியதற்கு, லோகிதாசன் மறத்துள்ளார்.‌

மேலும் தனது சமூகத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை லோகிதாசன் திருமணம் செய்து கொள்வதற்கு ஜெயப்பிரதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இளம்பெண் ஜெயப்பிரதாவை ஆண்டிபட்டியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அருகே இருக்கும் காலி இடத்தின் அழைத்துச் சென்ற லோகிதாசன் அவரை படுகொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி வண்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் லோகிதாசனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று தேனி மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் குற்றவாளி லோகிதாசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதமும், விதிக்கப்பட்டது. மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பளித்தார்.

banner

Related Stories

Related Stories