தமிழ்நாடு

“எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு ‘மிஸ்டுகால் கட்சி’ போட்டி போட முடியாது” : பா.ஜ.க கும்பலை சாடிய கீ.வீரமணி!

மிஸ்டுகால் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி சாடியுள்ளார்.

“எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு ‘மிஸ்டுகால் கட்சி’ போட்டி போட முடியாது” : பா.ஜ.க கும்பலை சாடிய கீ.வீரமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாளும், தி.மு.க அரசு மற்றும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் மாநில உரிமைகள் குறித்து தமிழக முதல்வரும் தொடர்ந்து பா.ஜ.க ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திராவிட கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் மாநில உரிமைகள் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசுகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் பறிக்கப் பட்டு வருவதை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பரப்புரை செய்து வருகின்றனர். அவர்கள் எப்பொழுதும் தமிழகத்தில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியும். எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ ஆக முடியாது.

சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும். மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது. சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக 100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories