இந்தியா

குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!

குஜராத்தில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பா.ஜ.க வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை ரத்து செய்து வருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் புருசோத்தம் ரூபாலா அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ”ராஜ்புத் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். ராஜபுத் ஆட்சியாளர்கள் தங்களது வீட்டு பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்” என கூறியிருந்தார்.

இதையடுத்து பா.ஜ.க. அமைச்சரின் இந்த பேச்சுக்கு ராஜபுத் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜ்கோட் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அமைச்சர் ரூபாலாவை மாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒன்றிய அமைச்சருக்கு எதிராகத் தொடங்கிய ராஜபுத் சமுதாயத்தினர் போராட்டம் தற்போது குஜராத் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் பரப்புரைக்குச் செல்லும் போது பொதுமக்கள் அவர்களுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், தங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்ற? கேள்வியை பா.ஜ.க வேட்பாளர்களிடம் எழுப்பி வருகிறார்கள். ஒருபுறம் ராஜபுத் சமுதாயத்தினர் போராட்டம் மற்றொரு புறம் பொதுமக்கள் கேள்வி என இருமுணை தாக்குதல்களை பா.ஜ.க வேட்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.

இதனால் பா.ஜ.க வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை ரத்து செய்து வருகிறார்கள். பதான் மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பரத்சிங்தாபிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் பிரச்சாரத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

அதேபோல் பருச் தொகுதி, பாவநகர், சிகோர் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பால் பா.ஜ.க வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளனர். பா.ஜ.கவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்திலேயே அக்கட்சி வேட்பாளர்களுக்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது இந்த மக்களவை தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories