தமிழ்நாடு

“பேருந்துகளில் இ-டிக்கெட்.. பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு” : அமைச்சர் சொன்ன அதிரடி அறிவிப்புகள் !

அரசு பேருந்துகளில் இ - டிக்கெட் திட்டம் இந்த ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

“பேருந்துகளில் இ-டிக்கெட்.. பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு” : அமைச்சர் சொன்ன அதிரடி அறிவிப்புகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ - டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

அதுவரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி, சீருடை அணிந்து வரும் மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும் பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், G pay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.மேலும், பள்ளி வாகனங்களில் முன்புறம் பின்புறம் கேமராக்கள் பொருத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories