தமிழ்நாடு

‘பில்கேட்ஸ் எதற்காக வந்தார்’ : செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த கலைஞர்!

பத்திரிக்கையாளர் சந்திப்பில், பில்கேட்ஸைச் சந்தித்தபோது என்ன பேசினீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு நகைச்சுவையாக பேசிய பதில் அளித்தார் கலைஞர்.

‘பில்கேட்ஸ் எதற்காக வந்தார்’ : செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த கலைஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தின் தனிப்பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99ஆவது பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அதுமட்டுமின்றி, ஊடகவியலாளர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலைஞர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவர் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாது, பில் கேட்ஸ், தலைவர் கலைஞரை சந்தித்த தருனம் பற்றியும் பலரும் நினைவுக்கூர்ந்து உள்ளனர்.

1996-2001 மற்றும் 2006-2011 ஆகிய இரண்டு முறை கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க அரசு தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளம் அமைத்து வளர்ச்சி நிலையையும் எட்டியது. சென்னை தரமணியில் ரூபாய் 340 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா உருவாக்கப்பட்டு 4-7-2000 அன்று இந்திய பிரதமர் வாஜ்பாய் திறந்து வைத்தார். அந்த விழாவில் தலைமை உரையாற்றிய பிரதமர் வாஜ்பாய், தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டங்களை பெரிதும் பாராட்டினார்.

‘பில்கேட்ஸ் எதற்காக வந்தார்’ : செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த கலைஞர்!

சென்னையைத் தொடர்ந்து கோயமுத்தூர், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய நகரங்கள் மற்றும் அதைப்போல் 19 இடங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை மிகச் சிறந்து விளங்கியது தி.மு.க ஆட்சியில் பல அன்னிய முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்தனர் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப புரட்சி தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் நடந்தது தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு தெற்கு ஆசியா கண்டத்தின் மிகச்சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப மையமாக உருவானது.

இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படும் பில் கேட்ஸ், சென்னை கோபலபுரம் இல்லத்தில் தலைவர் கலைஞரை சந்தித்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் பார்க்க அனுமதி இல்லை என்று மறுத்த பில் கேட்ஸ், தலைவர் கலைஞரை அன்றைய சந்தித்தது பெரும் பேசுப்பொருளானது.

அதன்பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பில்கேட்ஸைச் சந்தித்தபோது என்ன பேசினீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய கலைஞர், “பில்கேட்ஸ் என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக வந்திருந்தார்” என்று போகிறபோக்கில் கூறிவிட்டுச் சென்றார்.

‘பில்கேட்ஸ் எதற்காக வந்தார்’ : செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த கலைஞர்!

கலைஞர் இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால், தனது இயல்பை மறந்து இந்த சந்திப்பு குறித்து என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியும். ஆனால் கலைஞர் எப்படி தனது இயல்பான குணத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க முடிந்தது என்று நினைத்தால் ஆச்சரியம் மட்டும்தான் பதிலாக கிடைக்கும் என இத்தகைய சம்பவத்தை நினைவுக்கூர்ந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories