தமிழ்நாடு

வேலூர் to சென்னை.. ஓடும் ஆம்புலன்சில் சிகிச்சை - பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்!

108 வாகனம் மூலம் அவசர சிகிச்சைக்காக சென்றுகொண்டிருந்த மூன்று மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர் - பெற்றோர் நெகிழ்ச்சி

வேலூர் to சென்னை.. ஓடும் ஆம்புலன்சில் சிகிச்சை - பச்சிளம்  குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் பகுதியை சேர்ந்த காவலர் ஒருவரின் மூன்று மாத கைக்குழந்தை பாலூட்டும் நிகழ்வின் போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆபத்தான நிலையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தையை தயார் அனுமதித்துள்ளனர்.

மேலும் தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், சென்னைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வழியில் திருப்பெரும்புதூர் அருகே வரும்போது மீண்டும் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக நெடுஞ்சாலையில் உள்ள திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த மருத்துவர் அமுதாவிடம் குழந்தை உடல் நலம் குறித்து தெரிவித்தனர்.

உடனடியாக ஆம்புலன்சில் இருந்த குழந்தையை உடனே பரிசோதித்து மீண்டும் 108 ஆம்புலன்ஸ் உள்ளேயே சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றி, அதே ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்துச் செல்ல உதவினார். தக்க சமயத்தில் உதவிய மருத்துவருக்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories