தமிழ்நாடு

கண்டெய்னர் நிறுத்துவதில் தகராறு.. இளைஞரை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவர் - பகீர் சம்பவம்!

செங்குன்றம் தனியார் லாரி பார்க்கிங் யார்டில் மதுபோதையில் தகராறு செய்தவர்களை லாரி ஏற்றிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்டெய்னர் நிறுத்துவதில் தகராறு.. இளைஞரை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவர் - பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் தனியாருக்கு சொந்தமாக லாரி பார்க்கிங் யார்டு உள்ளது. இங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நவீன் (36) வடகரை பகுதியை சேர்ந்த குமரன் (34) மற்றும் நண்பர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தி கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர் லாரியை எடுக்க முயற்சி செய்துள்ளார். இது சம்பந்தமாக அவர்களுக்கும் வடமாநில லாரி டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த வடமாநில லாரி டிரைவர் லாரியை அவர்கள் மீது வேகமாக ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே கமலக்கண்ணன் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார்.

படுகாயமடைந்த நவீன் மற்றும் குமரன் ஆகிய இருவரை மீட்டு அங்குள்ளவர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்செய்தி கேட்டு அங்கு கூடிய உறவினர்கள் அப்பகுதி பொதுமக்கள் லாரி பார்க்கிங் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செங்குன்றம் போலிஸார் தப்பி ஓடிய வடமாநில லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories