இந்தியா

“எறும்புகள் கண்டுபிடித்த 222 மில்லியன் டன் தங்கம் சுரங்கம்” : பீகாரில் ஒரு KGF - பின்னணி என்ன?

பீகாரில் புதிதாக தங்க சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“எறும்புகள் கண்டுபிடித்த 222 மில்லியன் டன் தங்கம் சுரங்கம்” : பீகாரில் ஒரு KGF - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த பழமையான தங்க வயல்களில் ஒன்றான கோலார் தங்க வயல் கடந்த 2001ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட செலவு அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தங்க சுரங்கத்தை மையமாக வைத்துதான் kgf படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்றைப் பெற்றது.

இந்நிலையில் கோலார் தங்க வயலை விட மிகப் பெரிய தங்க சுரங்கம் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய புவியியல் துறை நடத்திய ஆராய்ச்சியில் அங்கு 222 மில்லியன் டன் தங்கம் இருப்பதும் இது இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% என்பதும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அங்கு சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்குள் முதல்கட்ட ஆய்வுக்காக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக மாநில சுங்கத்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஜமுயி பகுதியின் செம்மண் நிலத்தில் எறும்பு கூட்டங்கள் புற்று அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளது. அப்போது அதிலிருந்த மண் தங்கம் போன்று மின்னியுள்ளது. இதைப் பார்த்த அந்த பகுதி பொது மக்கள் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்ன் அடிப்படையில் அரசு சார்பில் அந்த இடத்தில் ஆய்வு நடத்தியபோது அங்கு தங்கம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories