தமிழ்நாடு

வங்கக்கடலில் தீவிரமடையும் அசானி புயல் - சென்னையில் மழை பெய்ய காரணம் என்ன? - வானிலை மையம் கூறிய தகவல்!

வங்கக்கடலில் தீவிரமடையும் அசானி புயல் - சென்னையில் மழை பெய்ய காரணம் என்ன? - வானிலை மையம் கூறிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீவிர புயல் அசானி, கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து இன்று இரவு வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை அருகே மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொள்ளும்.

அதன்பிறகு திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வட மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தீவிர புயல் அசானியின் வெளிப்புற மேகங்கள் காற்றின் திசைக்கு ஏற்ப நிலப்பரப்பிற்குள் வருகின்றன. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மீதும் வருவதினால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை கிடைத்துள்ளது. இது மேலும் தொடரக்கூடிய வாய்ப்பு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories