சினிமா

”நம் குடும்பம்தான் நமது கோட்டை” : வெளியானது அவதார் 2 பட டீசர்..!

பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், "அவதார்" முதல் பாக திரைப்படத்தை செப்டம்பர் 23 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.

”நம் குடும்பம்தான் நமது கோட்டை” : வெளியானது அவதார் 2 பட டீசர்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகமே எதிர்பார்த்து காண துடித்துக்கொண்டிருக்கும் படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'.

20th Century Studios வழங்கும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் 16 டிசம்பர், 2022 இந்தியாவில் வெளியாகிறது. உலகம் முழுவதும் அவதார் இரண்டாம் பாக திரைப்படம் சுமார் 160 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

“அவதார்” படத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் தலைப்பு “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்”. முதல் படமான “அவதார்” படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அதைகடந்த அவர்களின் வெற்றி தான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது .

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், CCH பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.

பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், "அவதார்" முதல் பாக திரைப்படத்தை செப்டம்பர் 23 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.

இந்த நிலையில், அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது படக்குழு. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

மேலும், டீசர் நெடுக வசனங்களே இல்லாமல் இருந்து ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இறுதியாக “நாம் எங்கே சென்றாலும் நம் குடும்பம்தான் நமது கோட்டை” என நாயகன் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories