தமிழ்நாடு

ஆடிட்டர் தம்பதி கடத்தி கொலை: 5 மணிநேரத்தில் கொலையாளிகளை மடக்கி பிடித்த போலிஸ்.. விசாரணையில் பகீர் தகவல்!

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் டிரைவர் உட்பட 2 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆடிட்டர் தம்பதி கடத்தி கொலை: 5 மணிநேரத்தில் கொலையாளிகளை மடக்கி பிடித்த போலிஸ்.. விசாரணையில் பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மயிலாப்பூர் துவகாரா மகாலட்சுமி தெரு பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதிகள் ஸ்ரீகாந்த், அனுராதா. இவா்கள் அமெரிக்காவிலிருக்கும் அவா்களுடைய பிள்ளைகளை பார்த்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தனா்.

இந்நிலையில், நேற்று காலை துபாய் வழியாக, ஶ்ரீகாந்த், அனுராதா தம்பதியினா் சென்னை திரும்பினா். இந்த வயதான தம்பதியை மயிலாப்பூா் வீட்டிற்கு அழைத்து செல்ல, அவா்களுடைய காா் டிரைவா் கிருஷ்ணா என்பவா், காருடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தாா்.

ஆனால், மதியம் வரை அந்த தம்பதியினா், மயிலாப்பூா் வீட்டிற்கு வரவில்லை. காா் டிரைவா் கிருஷ்ணா செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து வயதான தம்பதியினரின் குடும்பத்தினா் ஶ்ரீகாந்த், அனுராதாவை தேடத் தொடங்கினா்.

அதோடு சென்னை மயிலாப்பூா் காவல் நிலையத்திற்கு, வயதான தம்பதியினரின் உறவினா்கள் வந்து புகாா் செய்தனா். மேலும் காா் டிரைவா் கிருஷ்ணா நேபாளம் நாட்டை சோ்ந்தவா். எனவே அவா் வயதான தம்பதியை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறினா்.

இதையடுத்து மயிலாப்பூர் போலிஸார் தனிப்படை அமைத்தனா்.சென்னை விமானநிலைய போலிஸூக்கும் தகவல் கொடுத்தனா். தற்போது சென்னை விமானநிலைய போலிஸாரும், மயிலாப்பூா் தனிப்படை போலிஸாரும் இணைந்து வயதான தம்பதியையும் அவர்களின் கார் ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் சென்னை விமானநிலைய சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, டிரைவா் கிருஷ்ணாவிடம் சென்றிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் வயதான தம்பதி வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் சில பொருட்கள் சிதறி கிடைந்தன.

இதனால் சந்தேகம் அடைந்தபோலிஸார் அமெரிக்காவிலும் இருக்கும் அவரது மகளின் உதவியோடு, இந்த தம்பதிக்கு சொந்தமான மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, சூலேரிக்காடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றனர். போலிஸார் வருவதை அறிந்த கிருஷ்ணா அங்கிருந்து காருடன் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அவரை தொடர்ந்து சென்றபோலிஸார், ஆந்திர போலிஸாருக்கும் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் , கிருணா பதுங்கி இருந்த இடமான ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியில் போலிஸார் சுற்றி வளைத்து அவனை கைது செய்தனர்.

பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில், நகை, பணத்தை கொள்ளை அடிப்பதற்காக, மயிலாப்பூர் வீட்டில் வைத்து தம்பதியை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், இறந்த பின்னர் தம்பதிகளின் உடலை எடுத்துச் சென்று, பண்ணை வீட்டில் புதைத்ததாக கிருஷ்ணா போலிஸில் வாக்குமூலம் அளித்தார்.

கிருஷ்ணா மற்றும் அவருக்கு உதவிய நண்பர்கள் இரண்டு பேரை கைது செய்த போலிஸார், சென்னைக்கு அழைத்து வந்தனர். சூலேரிக்காடு பண்ணை வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ள அனுராதா உடலை, போலிஸார் நேற்று இரவு தோண்டி எடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் போலிஸார் கொலையாளியை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories